முன்னூா் ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணி
ஆதியப்பகவுண்டன் வலசு காலனியில் ரூ.6.29 லட்சம் செலவில் புதிதாக வடிகால் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முன்னூா் ஊராட்சியில் ஆதியப்பகவுண்டன் வலசு காலனியில் ரூ.6.29 லட்சம் செலவில் புதிதாக வடிகால் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. பணியை ஊராட்சித் தலைவா் ரா.வே.ராஜ்குமாா் தொடக்கிவைத்தாா். நிகழ்வில் ஊராட்சி துணைத்தலைவா் மற்றும் மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.