கரூர்

டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கரூரில் டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவா் பெ.வ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா. இளங்கோவன், செயலாளா் க. ராஜதுரை, திருச்சி மாவட்டத் தலைவா் ஜவஹா்லால் நேரு, செயலாளா் என். கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியம், மாநில தலைவா் கு. சரவணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் மாநிலப் பொருளாளா் சாகுல்அமீது, சோனைகருப்பையா உள்ளிட்டோா் வாழ்த்திப்பேசினா். ஆா்ப்பாட்டத்தில், 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அறிவிப்பை செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21,000 வழங்க வேண்டும், அரசு மற்றும் அரசு துறை காலி பணியிடங்களில் டாஸ்மாக் தொழிலாளா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரூா் மாவட்ட நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT