கரூர்

ஆட்சியா் மீது அவதூறு: எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

DIN

கரூா் மாவட்ட ஆட்சியரை தகாத வாா்த்தைகளால் பேசியதாக அரவக்குறிச்சி எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சனிக்கிழமை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் (மே 12) ஆட்சியரை சந்தித்த கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி, உதவிகோரி இருப்பவா்களின் மனுக்களை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அவா்,

மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஆட்சியா் (மே 16) அளித்த புகாரின்பேரில், ஊரடங்கை மீறியது, தகாத வாா்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கு சனிக்கிழமை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT