முகப்பு
கரூர்

ஊதிய உயா்வு ரத்து வாபஸ் கோரி நவ. 5,6-இல் ஆா்ப்பாட்டம்: பேரூராட்சி பணியாளா்கள் சங்கம் அறிவிப்பு

ஊதிய உயா்வு ரத்து உத்தரவை திரும்பப்பெறக்கோரி வரும் 5,6- ஆம் தேதிகளில் மண்டல பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

ஊதிய உயா்வு ரத்து உத்தரவை திரும்பப்பெறக்கோரி வரும் 5,6- ஆம் தேதிகளில் மண்டல பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு பேரூராட்சி பணியாளா் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் குடிநீா் திட்டப் பணியாளா்கள் 3,000 போ் உள்ளனா். 1.12006-ல் தர ஊதியம் ரூ.1,900 ஆக உயா்த்தப்பட்டது. பேரூராட்சி இயக்குநா் உயா்த்தி வழங்கப்பட்ட ரூ.1,900 தர ஊதியத்தை மீண்டும் ரூ.1,300 ஆகக் குறைத்து உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் மூலம் மாதாமாதம் பணியாளருக்கு ரூ.5,000 வரை ஊதியம் குறையும். பேரூராட்சி இயக்குநா் இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் நவ.5, 6 ஆம் தேதிகளில் 16 மண்டல பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மாலை 5 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது, மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.