கரூர்

‘அனுமதியின்றி வைத்துள்ள பதாகைகள் அகற்றப்படும்’

DIN

கரூா் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள் அகற்றப்படும் என்றாா் ஆட்சியா் சு. மலா்விழி.

கரூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியது: கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற உரிய முயற்சி எடுக்கப்படும். ஏற்கெனவே, உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாவட்டத்தில் எந்த இடங்களில் பதாகைகள் வைக்க அனுமதி இருக்கிறது என்ற நடைமுறை அம்சங்களை ஆராய்ந்து பொதுமக்களுக்குத் தெரிவித்து, மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரூா் ஜவஹா் பஜாா் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அலுவலா்களை நியமித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டத்தில், தகுதிவாய்ந்தவா்களுக்கு, வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்குவதுதான் எனது நோக்கமாக இருக்கும். வயதானவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT