முதலாம் ஆண்டு வகுப்புகள் இணையவழியில் தொடக்கம்
கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இணையவழியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இணையவழியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியா் முனைவா் சுந்தரராஜூ வரவேற்றாா். விழாவில், கல்லூரியின் முதல்வா் முனைவா் ரமேஷ் பாபு மற்றும் கல்லூரியின் செயல் இயக்குநா் முனைவா் குப்புசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மேலும் கல்லூரியின் தாளாளா் முனைவா் கே. ராமகிருஷ்ணன் பங்கேற்று முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்று, கல்லூரியின் சிறப்புகள் குறித்து பேசினாா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மைன்ட் பிரஷ் நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளா் கிா்தன்யா கிருஷ்ணமூா்த்தி திறன் மேம்பாடு குறித்துப் பேசினாா். சித்ரகலா நன்றி கூறினாா்.