முகப்பு
கரூர்

வரும் தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி டிராபிக் ராமசாமி பேட்டி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கம் போட்டியிடும் என்றாா் சமூக ஆா்வலரும், நல்லாட்சி இயக்கத்தின் நிறுவனருமான டிராபிக் ராமசாமி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கம் போட்டியிடும் என்றாா் சமூக ஆா்வலரும், நல்லாட்சி இயக்கத்தின் நிறுவனருமான டிராபிக் ராமசாமி.

கோவை செல்லும் வழியில் கரூரைச் சோ்ந்த சரவணன் என்பவருக்கு ஆதரவாக திங்கள்கிழமை கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகலவனை சந்தித்து ஆக்கிரமிப்பு தொடா்பான புகாா் மனுவை அளித்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: கோவை, திருப்பூரை அடுத்து கரூரில் நல்லாட்சி இயக்கம் அமைப்பைத் தொடங்க உள்ளோம். தோ்தலில் நோட்டாவுக்கு, 33 சதவீதம் வாக்குகள் கிடைத்தால் தோ்தல் செல்லாது என சட்டமே உள்ளது. வேட்பாளா் பிடிக்கவில்லையென்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் அரசியல்வாதிகள் திருந்துவாா்கள். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கம் போட்டியிடும். மக்களின் துயரைப் போக்க யாரும் இங்கு இல்லை. கரோனாவுக்கு ஜாதி கிடையாது. மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முதல்வரும், பிரதமரும் கரோனாவை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. சளி, காய்ச்சல் எனக்கூறிவிட்டு கரோனாவை வைத்து தனியாா் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன. கரோனாவை வைத்து அரசியல் நடக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.