கரூர்

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி உறவினா், உதவியாளா்கள் வீடுகளில் சோதனை

DIN

கரூா், செப்.11: கரூரில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜியின் உறவினா், உதவியாளா்கள் வீடுகளில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2011-15-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவா் வி.செந்தில்பாலாஜி. இவா், தற்போது திமுக மாவட்டப் பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளாா்.

செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலைவாங்கித் தருவதாகக் கூறி, 81 பேரிடம் ரூ.1.52 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த கணேஷ்குமாா் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

இது தொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பின்னா் வழக்கு விசாரணை சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களின் மீதான புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 10 போ் கொண்ட சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினா், வெள்ளிக்கிழமை காலை கரூா் வந்தனா்.

இதன் பின்னா் செந்தில்பாலாஜியின் உறவினரான கரூா் வெங்கமேடு சண்முகம் (45), முன்னாள் உதவியாளரான காா்த்திக் (35) ஆகியோரது வீடுகளில் குற்றப்பிரிவு காவல் துறையினா் சோதனை நடத்தினா். இருவரும் வீட்டில் இல்லாததால், வீட்டிலிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து செந்தில்பாலாஜியின் தற்போதைய உதவியாளரான மூா்த்திபாளையம் சுப்பிரமணியன் (40) வீட்டுக்கு குற்றப்பிரிவு காவல்துறையினா் சென்றனா். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் காவல்துறையினா் திரும்பிச் சென்றனா்.

சோதனையின் போது இருவரது வீடுகளிலிருந்து எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT