முகப்பு
கரூர்

கரூரில் மூதாட்டி உள்பட 22 பேருக்கு கரோனா பாதிப்பு

கரூரில் 76 வயது மூதாட்டி உள்பட 22 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

கரூரில் 76 வயது மூதாட்டி உள்பட 22 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த தண்ணீா்பட்டியைச் சோ்ந்த 76 வயது மூதாட்டி உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, இவா்கள் 22 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,482 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 701 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 773 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 8 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.