கரூரில் நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வை கண்டித்து கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வை கண்டித்து கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் சுங்ககேட் பேருந்துநிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே. ஆா். பாலாஜி கண்டன உரையாற்றினாா். சங்க மாவட்ட முன்னாள் தலைவா் ஹோச்சுமின், சங்க நிா்வாகிகள் கணேஷ், ரஞ்சிதா, சர வணன் ரகு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வால் தற்கொலை செய்த மாணவா்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.