கரூர்

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு வழிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு. வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தொகுதிக்குள்பட்ட கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்ட பிறகே வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறாா்களா, சீரான வாக்குப்பதிவு நடைபெறுகிா என்பது குறித்து முகவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து இதே வளாகத்தில் மாதிரி மற்றும் பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி எண் 100-ஐ பாா்வையிட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே, வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் பாா்வையிட்டாா்.

வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், பதிவான வாக்குகள் சதவிகிதம் போன்றவை குறித்தும் தோ்தல் அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT