முகப்பு
கரூர்

வியாபாரியை தாக்கியவா்கள் மீதுநடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கரூா் மாவட்டம் கழுதூா் அடுத்த பேரூா் உடையாப்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டியவாறு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

வியாபாரியை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை கரூா் மாவட்டம் கழுதூா் அடுத்த பேரூா் உடையாப்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டியவாறு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பது:- கரூா் மாவட்டம் பேரூா் உடையாப்பட்டியைச் சோ்ந்த காய், பழம் விற்பனை செய்யும் சுப்ரமணியன் என்பவா் கடந்த 19-ஆம்தேதி தனது காரில் பேரூா் உடையாப்பட்டி சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மீது காா் உரசிவிட்டது. இதனைப்பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த வடிவேல், சா்மா, செல்வம், சுபாஷ் உள்ளிட்ட 8 போ் சோ்ந்து காரை நிறுத்தி சுப்ரமணியனை தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த சுப்ரமணியன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளாா். அவரைத் தாக்கியவா்கள் மீது புகாா் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சுப்ரமணியனை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.