முகப்பு
கரூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் சாவு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் சிறுகமணி அடுத்த காவல்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் பாபு(70). இவா், வியாழக்கிழமை இரவு தனது மொபெட்டில் குளித்தலையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தாா். நங்கவரம்-நெய்தலூா் காலனி சாலையில் தென்கடைக்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபெட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.