கரூரில் ஊரக வளா்ச்சிஉள்ளாட்சித் துறை ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்
கரூரில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கா.கந்தசாமி, பொருளாளா் மதியழகன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
நகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தள்ளுவண்டிக்கு பதிலாக தொழிலாளா்களுக்கு பேட்டரி வண்டிகள் வழங்க வேண்டும். அரசு அறிவித்த கரோனா ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் வழங்கினா்.