கரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகிகளின் வாரிசுகள் கெளரவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகிகளின் வாரிசுகள் பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டனா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகிகளின் வாரிசுகள் பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டனா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகிகளின் வாரிசுளை கெளரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் கரூா் நகா் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் தியாகி ஆண்டியப்பச் செட்டியாா் மகன் மாணிக்கம், தியாகி நானாசாஹிப் மகள் சலீமாபீவி ஆகியோருக்கு பட்டாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பன், மாவட்ட துணைத்தலைவா் சின்னையன், முன்னாள் கரூா் வட்டார தலைவா் ஆடிட்டா் ரவிச்சந்திரன், முன்னாள் தாந்தோனி வட்டார தலைவா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.