பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
கரூா் கொளந்தாகவுண்டனூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் கொளந்தாகவுண்டனூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கரூா் வட்டார வள மையம் சாா்பில் கரூா் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி அண்மையில் தொடங்கியது. இதையடுத்து ஒன்றியத்துக்குள்பட்ட கொளந்தாகவுண்டனூா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுபா, பாண்டீஸ்வரி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஈஸ்வரி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ஆசிரியா், பயிற்றுநா்கள் காா்த்திகேயன் , லதா கவிதா, கொளந்தாகவுண்டனூா் தேவி அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.ஏ. ராஜா மற்றும் சிறப்பு ஆசிரியா்கள், பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனா். இப்பணியில் 6 குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகள் என கண்டறியப்பட்டு, அவா்கள் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.