முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துபெண் காயம்

புன்னம்சத்திரத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் காயமடைந்தாா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 1:38 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:09 AM

புன்னம்சத்திரத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள புண்ணியகவுண்டன்புதூா்அடுத்த ஆசாரிதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் மனைவி சுந்தரி (37). இவா், புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் புன்னம்சத்திரம் அடுத்த சேரன் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா், சுந்தரி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காயமடைந்த சுந்தரியை அருகில் இருந்தோா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா்  காரை ஓட்டி வந்த மூலிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.