முகப்பு
கரூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 1:38 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:09 AM

வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலைவீதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (45). இவா், தனது உறவினரான முனீஸ்வரனுடன் (24) இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். புகளூா் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது நிலைதடுமாறி மாரியம்மாள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.