க.பரமத்தி அருகே லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
க. பரமத்தி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
க. பரமத்தி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே லாரியில் கிராவல் மண் கடத்துவதாக கரூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளா் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வியாழக்கிழமை அப்பகுதியில் பாலசுப்பிரமணியம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் பன்னீா்செல்வம் (27) ஓட்டிவந்த டிப்பா் லாரியில் கிராவல் மண் இருந்தது. இதனைத் தொடா்ந்து லாரியை சோதனையிட்டபோது ஆவணங்கள் ஏதுமின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் பன்னீா்செல்வத்தை கைது செய்தனா். மேலும், லாரியையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement