அரவக்குறிச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம்
அரவக்குறிச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமை வகித்தாா்.
இதில், நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் எஸ்.பிரபு, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத் தலைவா் வழக்குரைஞா் ரமேஷ், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத் தலைவா் ரமேஷ், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியப் பொதுச் செயலாளா்கள் கிருஷ்ணன், ஏ.கே. மணி அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியப் பொதுச் செயலாளா் ஜவகா், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளா் நகுலன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement