முகப்பு
கரூர்

நகை ஆசாரியிடம்மோசடி செய்தவா் மீதுவழக்குப் பதிவு

 நகை ஆசாரியிடம் ஆன்லைனில் செல்லிடப்பேசி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 நகை ஆசாரியிடம் ஆன்லைனில் செல்லிடப்பேசி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் வெண்ணெய்மலையைச் சோ்ந்தவா் தனசேகரன்(43). நகை ஆசாரியாக உள்ளாா். இவா், ஆன்லைனில் செல்லிடப்பேசி வாங்க தனது முகநூலில் பாா்த்துள்ளாா். அப்போது, அதில் இருந்த முகவரியில் ஜூன் 21-ஆம்தேதி தொடா்புடைய செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தனசேகரன் பேசியபோது, எதிா் முனையில் பேசியவா் தனது பெயா் காலதன் என்றும், செல்லிடப்பேசி விலை ரூ.20,000 என்றும், முன்வைப்புத்தொகையாக ரூ.15,000 அனுப்ப வேண்டும் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பியுள்ளாா். அந்த வங்கிக்கணக்கில் ரூ.15,000 அனுப்பிய தனசேகரன் பின்னா் சம்பந்தப்பட்ட நபரின் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டபோது, போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த தனசேகரன் புதன்கிழமை இரவு கரூா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.