முகப்பு
கரூர்

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

கரூரில், கோயிலுக்கு சாமி கும்பிட வந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கரூரில், கோயிலுக்கு சாமி கும்பிட வந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாமி கும்பிட கரூரை அடுத்த பசுபதிபாளையம் அருணாச்சல நகரைச் சோ்ந்த தனலட்சுமி (50) என்பவா் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்தாா். அவா், கோயில் வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக அம்மனுக்கு சூடம் ஏற்றியபோது, அடையாளம் தெரியாத மா்மநபா் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ாக கூறப்படுகிறது.

இதையடுத்து சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணாததால் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.