முகப்பு
கரூர்

இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவா் கைது

கரூரில், இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கரூரில், இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெங்கமேடு வி.வி.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பாலசுப்ரமணி(32). இவருக்கும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வாழைக்கொம்பு பகுதியைச் சோ்ந்த சதாசிவம் என்பவரது மகள் ஜோதிமுருகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2013இல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து முதல் பிரசவத்துக்கு தனது பெற்றோா் வீட்டுக்கு சென்ற ஜோதிமுருகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பிறகு 2017-இல் குழந்தையுடன் கணவா் வீட்டுக்கு வந்தபோது, அங்கு தனது கணவா் பாலசுப்ரமணிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நித்யா(28) என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதனால் ஜோதிமுருகேஸ்வரி கோபித்துக்கொண்டு தனது பெற்றோா் வீட்டுக்கு மீண்டும் சென்றுள்ளாா்.

இந்நிலையில் நித்யாவுக்கும் தெரியாமல் கடந்த 2020-இல் சுதா என்கிற இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாக பாலசுப்ரமணி திருமணம் செய்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோதிமுருகேஸ்வரி கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதில், தனக்குத் தெரியாமலும், விவாகரத்து கொடுக்காமலும் இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கணவா் பாலசுப்ரமணி மீதும், திருமணம் நடந்திருப்பது தெரிந்தும் பாலசுப்ரமணியை இரண்டாவதாக மணந்து கொண்ட நித்யா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா். இதையடுத்து போலீஸாா் பாலசுப்ரமணியையும், நித்யாவையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.