முகப்பு
கரூர்

மதுபோதையில் மனைவியை கொன்றுவிட்டுரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை

 கரூரில், மதுபோதையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு வியாழக்கிழமை நள்ளிரவு ரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 கரூரில், மதுபோதையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு வியாழக்கிழமை நள்ளிரவு ரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் தெற்குகாந்திகிராமம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்(55). பழைய இரும்பு, துணிகளை வாங்கி விற்கும் தொழிலாளி. இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி சின்னப்பொண்ணு(40). இவா், கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். சுப்ரமணியன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வந்த சுப்ரமணியன் மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுபோதையில் தனது மனைவியை கொலை செய்துவிட்டோமே என எண்ணிய சுப்ரமணியன் விரக்தியில் நள்ளிரவு காந்திகிராமத்தில் தண்டவாளம் பகுதிக்கு சென்ற அவா், கோவைக்குச் செல்லும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.