முகப்பு
கரூர்

கரூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தடுப்பூசி முகாம்

கரூா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கரோனா தடுப்பூசி முகாம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கரூா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கரோனா தடுப்பூசி முகாம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற முகாமிற்கு கரூா் மாவட்ட மேல்மருவத்தூா் ஆதிபராசக்திஆன்மிக இயக்க மாவட்டத்தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தாா். திமுக நகர பொறுப்பாளா் சுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். இதில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு 700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. தொடா்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திமுக நிா்வாகிகள் லோகு, தங்கராஜ் ,ராஜா, முத்துலட்சுமி, திருகை இளங்கோ, தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.