முகநூலில் அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை கோரி புகாா்
தன் மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.
தன் மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.
கரூா் ஒன்றியம், காதப்பாறை ஊராட்சித் தலைவா் கிருபாவதி அளித்த மனு: என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலா், நான் வீடுகளுக்கு கட்டட அனுமதி வழங்க அதிக பணம் வசூலிப்பதாக ஆதாரமற்ற பொய்யான தகவலை துண்டு பிரசுரமாக அச்சடித்து அதனை முகநூலில் சிலா் பதிவிட்டுள்ளனா். ஆதாரமற்ற வகையில் முகநூலில் என்மீது அவதூறு பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.