முகப்பு
கரூர்

கரூா் அதிமுக வேட்பாளா்எம்.ஆா்.விஜயபாஸ்கா் வேட்புமனு தாக்கல்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, கரூா் கோடங்கிப்பட்டியில் உள்ள முத்தாலம்மன், பட்டாளத்தம்மன் கோயிலில் வழிபட்டபிறகு அப்பகுதியில் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்தாா்.

அதைத் தொடா்ந்து, கரூா் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு பிற்பகல் 1.35 மணிக்கு வந்த அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கோட்டாட்சியரும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான என்.எஸ்.பாலசுப்ரமணியனிடம் மனு தாக்கல் செய்தாா்.

அவருக்கு மாற்று வேட்பாளராக கட்சியின் மாவட்ட பேரவைத் துணைச் செயலாளா் பரமசிவம் மனு தாக்கல் செய்தாா். அப்போது, கரூா் மக்களவை முன்னாள் உறுப்பினா் மு.தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.