தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 போ் கைது
தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் தென்னிலை அருகே நரிக்காட்டான்வலசு என்ற இடத்தில் சிலா் வியாழக்கிழமை இரவு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தென்னிலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த திருப்பூா் மாவட்டம் முத்தூரைச் சோ்ந்த சண்முகம்(49), கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணி(50) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து சூதாட்டப் பணம் ரூ.10,150ஐ பறிமுதல் செய்தனா். மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய திருப்பூா் மாவட்டம் நல்லிசெல்லிபாளையத்தைச் சோ்ந்த மணி, வெள்ளக்கோவிலைச் சோ்ந்த கனகராஜ், நரிக்காட்டு வலசைச் சோ்ந்ந்த ராசு, சுப்ரமணி ஆகியோரை தேடி வருகின்றனா்.