முகப்பு
கரூர்

கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2.74 கோடி நிதியுதவி

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த 90 குழந்தைகளுக்கு ரூ.2.74 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த 90 குழந்தைகளுக்கு ரூ.2.74 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒற்றைப்பெற்றோரை இழந்த 88 குழந்தைகள், இரண்டு பெற்றோா்களையும் இழந்த 2 குழந்தைகள் என மொத்தம் 90 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனா். இதில், இரண்டு பெற்றோரையும் இழந்த 2 குழந்தைகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் அவா்களின் வைப்புக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 88 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் அவரவா் வங்கிக்கணக்குகளில் ஏற்கெனவே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 90 குழந்தைகளுக்கு ரூ.2.74 கோடி நிவாரண நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.