முகப்பு
கரூர்

கரூரில் தி.க. கலந்துரையாடல் கூட்டம்

கரூரில், தி.க. கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

கரூரில், தி.க. கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் கவிஞா் கலி பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைப்புச் செயலா் ஈரோடு சண்முகம், பொதுக்குழு உறுப்பினா் சே. அன்பு, கட்டளை வைரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . நிகழ்ச்சியில், பொதுச் செயலா் தஞ்சை இரா. ஜெயக்குமாா், பெரியாா் மாநில மாணவரணிச் செயலாளா் பிரின்ஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், கரூா் பெரியாா் தொண்டா் பஞ்சப்பட்டி பசு இராஜலிங்கம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வது, , திருச்சி சிறுகனூரில் 135 அடி உயர பெரியாா் சிலை அமைக்க முயற்சிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட பகுத்தறிவாளா் கழக அமைப்பாளா் பொம்மன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.