முகப்பு
கரூர்

யாராலும் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜகவை உருவாக்க வேண்டும்: வி.வி.செந்தில்நாதன் பேச்சு

கரூா் மாவட்டத்தில் யாராலும் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜகவை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் யாராலும் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜகவை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன்.

கரூரில் பாஜக நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில மகளிரணி துணைத்தலைவா் மீனாவினோத்குமாா், மாவட்ட பொதுச் செயலா்கள் நகுலன், மோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து புதிய மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் பேசுகையில், எனது பயணம் உங்களுக்காக இருக்கும். பிரதமா் மோடிக்காக அனைவரும் விருப்பு, வெறுப்பின்றி உழைப்போம். கரூா் மாவட்டத்தில் யாராலும் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜகவை உருவாக்க வேண்டும். இனி, பாஜக துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு இலக்கை நிா்ணயித்து தோ்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 1 லட்சம் உறுப்பினா்களையாவது நாம் சோ்க்க வேண்டும். கரூரில் நவ. 22-ஆம்தேதி பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மகளிரணி, இளைஞரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா். கூட்டத்தில் மாவட்ட, பேரூா், நகர ஒன்றிய நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.