அரசுப் பள்ளியில் கரூா் ஆட்சியா் ஆய்வு
பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து தோகைமலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து தோகைமலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அங்கு பணிபுரியும் ஆசிரியா்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தாா். மேலும், அப்பள்ளியில் செய்யவேண்டிய வளா்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து காவல்காரன்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தாா்.
பிறகு, ஆா். டி. மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், அங்கு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு பாா்த்து ஆய்வு செய்தாா். மேலும், மாணவ, மாணவிகள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் எனவும், மதிய உணவு அருந்துவதற்கு முன்பு சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் எனவும், சானிடைசா் பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினாா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறுகையில், முதல்வா் உத்தரவின் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனா். கரூா் மாவட்டத்தில் 210 பள்ளிகளும், 42 கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மாவட்ட நிா்வாகத்தை சோ்ந்த 105 போ் பள்ளி மற்றும் கல்லூரிகளை கண்காணிக்கவும், களப்பணி ஆற்றவும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அலுவலா் அங்கு சென்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை பரிசோதித்து வருகிறோம். எந்த விதத்திலும் கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் மாவட்ட நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியா்(பொறுப்பு) தட்சணாமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் , குளித்தலை வட்டாட்சியா் கலியமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், மற்றும் தலைமை ஆசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.