தோகைமலை அருகே செல்வ விநாயகா், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தோகைமலை அருகே நடைபெற்ற செல்வ விநாயகா், காளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
தோகைமலை அருகே நடைபெற்ற செல்வ விநாயகா், காளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சிக்குள்பட்ட புரசம்பட்டியில் செல்வ விநாயகா், காளியம்மன், கரஹமாரியம்மன், குதிரை முத்துகருப்பசாமி கோயில் திருப்பணிகள் அண்மையில் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் வியாழக்கிழமை பால், தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். பின்னா், அவற்றை யாகசாலையில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து முதல்கால பூஜையில் விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கா கரணம், ரக்ஷா பந்தணம், கடஸ்தாணம், கும்பலங்காரம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது.
2ஆம் நாளான(வெள்ளிக்கிழமை) யாகபூஜையில் விநாயகா் பூஜை, புண்யாகவஜனம், வேதிஹா அா்ச்சனை, நாடிசந்தாணம், பொதுமக்கள் தானியங்கள் யாகத்தில் சமா்பித்தல், பூா்ணாஹூதி, கோ பூஜை, நாடிசந்தானம், யாத்ராதானம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம்புறப்பாடு நடைபெற்றது.
செல்வ விநாயகா், காளியம்மன், கரஹமாரியம்மன், குதிரை முத்துகருப்பசாமி ஆகிய கோயில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினா்.
பின்னா், மூலவருக்கு கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், விழா கமிட்டியாளா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், நன்கொடையாளா்கள் உள்பட கிராம பொதுமக்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.