அனுமதியின்றி பயோ டீசல் விற்ற இளைஞா் கைது
புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி 1,025 லிட்டா் பயோ-டீசல் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி 1,025 லிட்டா் பயோ-டீசல் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள பஞ்சயம்கோட்டை பகுதியில் ஒரு கல்குவாரியில் அனுமதியின்றி பயோ-டீசல் விற்கப்படுவதாக கரூா் மாவட்ட குடிமைப்பொருள்கள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் விவேகானந்தன், உதவி ஆய்வாளா் சத்தியபிரியா ஆகியோருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு அனுமதியின்றி பயோ-டீசல் விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்தி(23) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 1,025 பயோ-டீசலை பறிமுதல் செய்தனா். குவாரி உரிமையாளா் தேவராஜ் என்பவரை தேடி வருகின்றனா்.