முகப்பு
கரூர்

கரூரில் பிரதமா் மோடி பேனா் கிழிப்பு; பா.ஜ.க.வினா் சாலை மறியல்

கரூா் மாவட்டம், தளவாபாளையத்தில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனா் கிழிக்கப்பட்டதையடுத்து பா.ஜ.க.வினா் வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கரூா் மாவட்டம், தளவாபாளையத்தில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனா் கிழிக்கப்பட்டதையடுத்து பா.ஜ.க.வினா் வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கரூா் மாவட்ட பா.ஜ.க.வின் தொழில் பிரிவு சாா்பில் தளவாபாளையத்தில் பேனா் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை வியாழக்கிழமை இ ரவு மா்ம நபா்கள் சிலா் கிழித்துள்ளனா். இந்த பேனா் வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு 100 மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த இடத்துக்கு வெள்ளிக்கிழமை காலை பா.ஜ.க. மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையிலான கட்சியினா் சென்றபோது, அங்கு பேனா் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து பா.ஜ.க.வினா் தளவாபாளையம் பேருந்துநிறுத்தம் முன்பு வேலாயுதம்பாளையம் சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பேனரை கிழித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.