அரவக்குறிச்சி அருகே சூதாடிய 11 போ் கைது
அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வெங்கமேட்டூரில் வேலுசாமி என்பவரது தோட்டத்து வீட்டில் புதன்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் பழைய கரூா் சாலையைச் சோ்ந்த சதீஷ்(37) உள்பட 11 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.10.66 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.