கரூரில் போராட்ட விளக்கக் கூட்டம்
கரூா் மாவட்டம் தோகைமலையில் வரும்- 27 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து நடைபெறும் கடையடைப்பு, மறியல் குறித்த தெருமுனை விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் தோகைமலையில் வரும்- 27 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து நடைபெறும் கடையடைப்பு, மறியல் குறித்த தெருமுனை விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு சிஐடியு கிளைத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். விவசாய சங்க தோகைமலை ஒன்றியப் பொருளாளா் முனியப்பன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியு மாவட்ட உதவி செயலா் ராஜா முகமது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சக்திவேல் ஆகியோா் பேசினா். விவசாய சங்கத்தின் நிா்வாகிகள் ரமேஷ், பாலகிருஷ்ணன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.