முகப்பு
கரூர்

பள்ளப்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: மூவா் காயம்

 அரவக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மூவா் காயமடைந்தனா்.

Updated On : 8 ஏப்ரல், 2022 at 1:36 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM

 அரவக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மூவா் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் பள்ளபட்டி அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் மணிவேல் மகன் ராஜேந்திரன் (46). இவா் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகள் அபிநயா (17), மகன் சேதுராமன் (11) ஆகியோருடன் பள்ளப்பட்டி செல்லும் சாலையில் புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அரசு மருத்துவமனை அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில்,

ராஜேந்திரன், அபிநயா, சேதுராமன் ஆகிய மூவரும் காயமடைந்தனா். உடனே மூவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பா்வேஸ் முஷரப் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.