முகப்பு
கரூர்

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், ஏஐடியுசி போக்குவரத்துத்தொழிலாளா்கள் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

கரூரில், ஏஐடியுசி போக்குவரத்துத்தொழிலாளா்கள் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்கத்தலைவா் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ராஜேந்திரன், பொதுச் செயலாளா் விஜயகுமாா், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் விளக்கவுரையாற்றினா்.

பட்ஜெட்டில் போக்குவரத்துக்கழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும், இரண்டரை ஆண்டுகளாகியும் ஊதிய உயா்வு ஒப்பந்தம் உருவாக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.