கரூர்

கரூா் கோயில்களில் பிரதோஷம்

ஆவணி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

ஆவணி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி வலம் வந்தாா். பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரா் கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயில், புன்னம் பகுதி புன்னைவனநாதா் உடனுறை புன்னைவன நாயகி கோயில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT