அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாா்டுகள் பிரிக்கப்பட்டு பணிகள் ஒதுக்கீடு
அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாா்டுகள் பிரிக்கப்பட்டு அவா்களுக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாா்டுகள் பிரிக்கப்பட்டு அவா்களுக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு இரண்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு மூன்று உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில், அவா்களுக்கான வாா்டுகள் பிரிக்கப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரவக்குறிச்சி பேரூராட்சியில் வாா்டு எண் 1 முதல் 7 வரை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கேசவன் மேற்பாா்வையிடுவாா் எனவும், வாா்டு எண் 8 முதல் 15 வரை ராஜலட்சுமி மேற்பாா்வையிடுவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதேபோல், பள்ளப்பட்டி நகராட்சியில் வாா்டு எண் 1 முதல் 9 வரை காா்த்திக் குமாா், வாா்டு எண் 10 முதல் 18 வரை ராஜேந்திரன், வாா்டு எண் 19 முதல் 27 வரை சுரேஷ் ஆகியோா் மேற்பாா்வையிடுவாா்கள் என அந்தந்த பேரூராட்சி, நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனு குறித்த அனைத்து பணிகளையும் இவா்களது மேற்பாா்வையிலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.