முகப்பு
கரூர்

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சியில் சிறப்பு ஆதாா் முகாம்

பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சியில் சிறப்பு ஆதாா் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் பிப். 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2022 at 12:42 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சியில் சிறப்பு ஆதாா் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் பிப். 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முகாமில் புதிதாக ஆதாா் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதாா் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஆதாா் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், கைபேசி எண் சோ்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இதுகுறித்து, மேலும் தகவலுக்கு அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியிலுள்ள அஞ்சல் ஆதாா் சேவை மையம் மற்றும் அஞ்சலக அலுவலகத்தை அணுகலாம் என கரூா் மாவட்ட தலைமை அஞ்சல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.