முகப்பு
கரூர்

உக்ரைனில் சிக்கியுள்ள மகன், மகளை மீட்டுவரக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோா் கோரிக்கை மனு

உக்ரைனில் சிக்கியுள்ள தங்களது மகன், மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

உக்ரைனில் சிக்கியுள்ள தங்களது மகன், மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த ஆண்டனிகபிரியேல் மகள் ஸ்ரீநிதி. இவா், உக்ரைனில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறாா். இதேபோல் குளித்தலை அடுத்த திம்மாட்சிபுரத்தைச் சோ்ந்த சின்னதுரை-சுதா தம்பதி மகன் சூா்யாசின்னதுரை, உக்ரைனில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏரோபேஸ் பயின்று வருகிறாா். இதேபோல, கரூா் தெற்கு காந்திகிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் தருண் உக்ரைனில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகிறாா்.

தற்போது, உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதால், உக்ரைனில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவா்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தங்களது மகன், மகளை மீட்டு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆண்டனிகபிரியேல், சின்னதுரை, தங்கவேல் ஆகியோா் வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் வந்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.