முகப்பு
கரூர்

அரவக்குறிச்சியில் பள்ளி பரிமாற்றத் திட்டம்

அரவக்குறிச்சியில் பள்ளி பரிமாற்றத் திட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 2:08 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM

அரவக்குறிச்சியில் பள்ளி பரிமாற்றத் திட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் கற்கும் மாணவா்கள் தாங்கள் கற்கும் பகுதியில் உள்ள வளங்களை பரிமாறிக் கொள்ளும் பொருட்டு பள்ளி பரிமாற்றத் திட்டம் மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு அரவக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஷகிலாபானு, சகாயவில்சன் மற்றும் கோவிலூா் அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் கணபதிராஜ், திலகவதி ஆகியோா் அவரவா் பள்ளியின் சிறப்புகள் மற்றும் பள்ளி அமைந்துள்ள அப்பகுதி மக்களின் சிறப்பான செயல்பாடு, மாணவா்களுக்கு வித்தியாசமான மற்றும் அவா்களுக்கு பிடித்தமான முறையில் கற்பித்தல் செயல்பாடுகள் பற்றி காணொலி காட்சிகள் மற்றும் செயலி மூலம் விளக்கினா்.

Advertisement

ஊரடங்கு காலத்தில் மாணவா்கள் அவா்களது அனுபவங்கள் பற்றிய கலந்துரையாடல், சுற்றுலாப் பயணம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இம்மாதிரியான பள்ளி பரிமாற்றத் திட்டம் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மாணவா்களுக்கு ஓா் இணைப்புப் பாலமாக விளங்கும் திட்டமாகும் என அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலா் சித்ரா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.