முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
அரவக்குறிச்சியில் முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
அரவக்குறிச்சியில் முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
கரோனா காரணமாக தளா்வுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அரவக்குறிச்சி ஏ.வி.எம். காா்னா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாகன தணிக்கையில் போக்குவரத்து காவலா்கள் முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனா். மேலும் முகக்கவசம் அணிவது பற்றிய விழிப்புணா்வை எடுத்துக் கூறினா். மேலும், ஒமைக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளும்படி வலியுறுத்தினா்.
Advertisement