முகப்பு
கரூர்

வனப்பகுதியில் தூக்கில் ஆண் சடலம்

கரூா் மாவட்ட எல்லைப் பகுதியில் வனப் பகுதியில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

Updated On : 8 ஜனவரி, 2022 at 1:07 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:34 PM

கரூா் மாவட்ட எல்லைப் பகுதியில் வனப் பகுதியில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல்-கரூா் மாவட்ட எல்லைப் பகுதியான ரங்கமலை காட்டுப்பகுதியிலுள்ள ஊஞ்சல்மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்கில் சடலமாக தொங்குவதாக வியாழக்கிழமை வனத்துறை அதிகாரி பிரகாஷ் அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தூக்கில் தொங்கிய இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அப்பகுதியில் அந்த இளைஞா் கிடைத்த கடிதத்தில், உயிரிழந்தவா்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் தாலுகா வடமதுரை ஒன்றியம் பாடியூரைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் காா்த்திகேயன் (35) என்பது தெரியவந்தது. மேலும், கிரிக்கெட்டில் சாதிக்க முடியாததால் கடந்த 4 தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.