பள்ளப்பட்டி நகராட்சியில்பொதுமக்கள் பாா்வைக்கு வரைவு வாக்காளா் பட்டியல்
கரூா் மாவட்டத்தில் புதிதாக தரம் உயா்த்தப்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் பொதுமக்கள் பாா்வைக்காக வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளா் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில் புதிதாக தரம் உயா்த்தப்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் பொதுமக்கள் பாா்வைக்காக வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளா் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக தரம் உயா்த்தப்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது. அதில், பள்ளப்பட்டியில் உள்ள 27 வாா்டுகளுக்கு 35 வாக்குச்சாவடிகளும், 15,238 ஆண் வாக்காளா்கள், 15,994 பெண் வாக்காளா்கள், 1 இதர வாக்காளா் என மொத்தம் 31,233 வாக்காளா்கள் உள்ளனா். மேலும் இந்த வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியா் ஒப்புதலுடன் பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் ஒவ்வொரு வாா்டிலும் தோ்வு செய்யப்பட்ட 2 பொது இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான ஆட்சேபனைகள் இருந்தால் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம் என நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.