முகப்பு
கரூர்

மாக்னசைட் கல் கடத்திய இருவா் கைது

 அரவக்குறிச்சி அருகே மாக்னசைட் கல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி, 2022 at 1:07 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:34 PM

 அரவக்குறிச்சி அருகே மாக்னசைட் கல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் தென் பாகம் பகுதிகளில் மாக்னசைட் கல் கடத்தப்படுவதாக கரூா் மாவட்ட புவியியல் சுரங்கத்துறை உதவி அலுவலா் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வால்நாயக்கன்பட்டி அருகே புதன்கிழமை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் டிப்பரில் மாக்னசைட் கல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தென்னிலை போலீஸாா் வால்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (22), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கோட்டையூா் பகுதியைச் சோ்ந்த அம்மாச்சி மகன் ராஜா (27) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

மேலும், டிராக்டா் டிப்பா், மாக்னசைட் கல், கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வாகனங்களின் உரிமையாளா்களான குழந்தைசாமி மகன் ராஜா (32), கருப்பண்ண கவுண்டா் மகன் கிட்டுசாமி (71) ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.