முகப்பு
கரூர்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

 பள்ளப்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி, 2022 at 1:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:34 PM

 பள்ளப்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளப்பட்டி கோ் நகரைச் சோ்ந்தவா் ஷேக் அப்துல் ரஹீம் மகன் சதாம் உசேன் (27). இவா், வியாழக்கிழமை பள்ளப்பட்டியில் இருந்து பழனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வேலம்பாடி ஊராட்சி கோ் நகா் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் அசோக்குமாா் (34) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சதாம் உசேனின் வாகனம் மீது மோதியது.

இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பிறகு சதாம் உசேன் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் அசோக்குமாா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.