முகப்பு
கரூர்

சின்னதாராபுரம் அருகே மினி ஆட்டோ மோதியதில் இளைஞா் காயம்

சின்னதாராபுரத்தை அடுத்த காசிபாளையம் அருகே மினி ஆட்டோ மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2022 at 12:53 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

சின்னதாராபுரத்தை அடுத்த காசிபாளையம் அருகே மினி ஆட்டோ மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.

திருச்சி மாவட்டம் மகிழ்ச்சி நகா் பழங்கானங்குடிசாலையைச் சோ்ந்த சதாசிவம் மகன் அருள்கணபதி (28). இவா் வெள்ளிக்கிழமை மாலை தாராபுரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். காசிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் அருள்கணபதி காயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் மினி ஆட்டோவை ஓட்டி வந்த சுடலைமணி என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.